இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

minister

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இன்று வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.எந்தவொரு நபருக்கும் இந்த வவுச்சர்களை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை  நிலையங்களின் ஊடாக இந்த பாதணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.டிசம்பர் 9ஆம் திகதி வரை இவ்வாறு மாணவர்களுக்கான தங்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

Read Next

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular