விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்! – கமல்

When the movie Vishwarupam was released, an old woman made me stumble and laugh! – Kamal

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நேற்று கருங்கல்பாளையம் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை” என கூறினார்.

மேலும், “விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டும் என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின் என்று பேசினார். விஸ்வரூபம் படம் குறித்து பற்றி கமல் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக விஸ்வரூபம் பட வெளியீட்டின்போது நடந்தவை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பழைய பேட்டி ஒன்று சமீபத்தில் வைரலாகிவருகிறது. இதனை கமல் ரசிகர்கள் பகிர்ந்துவருகிறார்கள்.

“காலில்” விழ சொன்னார்கள் விழல, “நேரில்” வந்து பார்க்க சொன்னார்கள் போல, பெத்த அப்பனாக இருந்தாலும் நியாத்துக்கு எதிரா இருந்தா விழமாட்டேன்னு சொன்னேன், “அரசாங்கம்” மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றேன் – கமல்ஹாசன்

 

Read Previous

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

Read Next

ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரி பாய்’ஐ கொலைசெய்த நபர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular