Vladimir Putin ready to war in Ukraine
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அமெரிக்கா தனது கொள்கையில் செய்துள்ள பெரும் மாற்றத்தால், மூன்றாம் உலகப்போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தனது கூட்டாளர்களான மேற்கத்திய நாடுகளின் உதவியை தொடர்ந்து கோரிவருகிறது உக்ரைன்.
ரஷ்யாவை எதிர்த்துத் தாக்க, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா என பல நாடுகளிடம் உதவி கோரிவருகிறது உக்ரைன்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்தால் ரஷ்யாவின் கோபத்தை எதிர்கொள்ளவேண்டிவரும் என முதலில் சில நாடுகள் தயக்கம் காட்டினாலும், பின்னர், சில நிபந்தனைகளுடன் அந்நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றன.
என்றாலும், சமீபத்தில் உக்ரைன் ஆதரவு நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அதாவது, ஈரான், வடகொரியா மற்றும் சீன ஆயுதங்களைக் கொண்டு உக்ரைனைத் தாக்கிவருகிறது ரஷ்யா.
ஆனால், உக்ரைனுடைய மேற்கத்திய கூட்டாளி நாடுகள் வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவைத் தாக்கக்கூடாது என்கிறார் புடின்.
ஆகவே, ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கிவரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் தற்போது அனுமதியளித்துள்ளார். என்றாலும், அந்த அனுமதி, Kharkivவை பதுகாப்பதற்காக மட்டுமே.
அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்
ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் எங்கள் நாட்டைத் தாக்கினால், உலகப்போர் வெடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.
அவரது எச்சரிக்கையையும் மீறி தற்போது அமெரிக்கா முதலான நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என அனுமதியும் அளித்துள்ளதால், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் அதிகமாகிவருகிறது.