மயில்சாமியின் ஆசை இதுதான்.. – சிவமணி உருக்கம்..!

Mayilsamy’s wish is this.. – Sivamani

சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முழுவதும் கோயிலில் தன்னுடன் மயில்சாமி இருந்த அனுபவத்தை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ஸ் சிவமணி, “நடிகர் மயில்சாமி மகா சிவராத்திரிக்கு இந்த ஆண்டு திருவண்ணாமலை செல்லவில்லை. கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்லலாம் என கூறினார். நாங்கள் இருவரும் சிவன் கோயிலுக்கு சென்று விடிய விடிய சிவன் பாடல்களை பாடி சிவனின் அருளை பெற்றோம். மயில்சாமி விடியற்காலை 3 மணியளவில், வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது கூட மயில்சாமிக்கு நன்றி சொல்லி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். திடீரென 5 மணியளவில் மயில்சாமியின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இசை கச்சேரியை முடித்து விட்டேன் என கூறலாம் என அழைப்பை எடுத்த போது, அவர் காலமான செய்தி தெரிந்தது” என கூறினார்.

மேலும்,  “விவேக் சாரை இந்த கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறேன். உன்னையும் அழைத்து வந்துவிட்டேன். எனது கடைசி ஆசை நடிகர் ரஜினிகாந்தையும் இந்த கோயிலுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான்” என கூறியதாக தெரிவித்தார்.

Read Previous

40 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தம் – கோழிப்பண்ணையாளர்களை வருத்தம்!

Read Next

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular