ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

immigration

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் வட மாகாண மக்கள் தோஹா மற்றும் டுபாய் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இலங்கை பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி, யாழ்ப்பாண பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

Read Previous

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

Read Next

தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular