தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்

mac donald

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத் தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட் டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார். இலங்கையில் போர் குற்றங்களில்
ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், “இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக அமெ ரிக்கா கனடாவை பாராட்டுகிறேன். எனது தொகுதியை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தைப் பற்றி அறிய இலங்கைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போய்விட்டார். அவ ருக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியாது”, என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட் டேவே உரையாற்றுகையில்,
“அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திர சில்வா, ஜெகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடை களை விதிக்கலாம். இலங்கை மீது செல் வாக்கு செலுத்துவதற்காக வர்த்தக உடன்படிக்கைகளை பயன்படுத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும் வலியுறுத்த வேண்டும். பிரிட் டனும் இதனை வலியுறுத்த வேண்டும்”, என்றும் கூறினார்.

Read Previous

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

Read Next

தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular