பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

hot temperature,Thermometer on yellow sky with sun shining in summer show higher Weather, concept global warming

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக  நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம்(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக நிலவக் கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் வெப்பநிலை

மேல், தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று கடும் வெப்பமான கால நிலை நிலவக் கூடும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்

Read Next

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular