பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

#earthquake #disaster #worldnews

பப்புவா நியூ கினியவில் மண்சரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (26 ) அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது.

அதிகாலை சுமார் 3 மணியளவில் மண்சரிவ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதியாக உறங்கி கொண்டிருந்த நேரம். அப்போது எதிர்பாராத இந்த மண்சரிவினால் குறைந்த பட்சம் 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் 3 கிராமங்கள் மண்சரிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் சிக்கியுள்ளது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த்தாக ஐ.நா. தெரிவித்தது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய மண்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக தற்போது அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மண்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்ததாகவும் 150- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால் எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தோண்ட ஆரம்பித்துள்ளனர். கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க:

https://thamilarnews.com/weathernews-4/

Read Previous

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

Read Next

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular