#thamilar #news #weathernews #remel
ரீமல் புயல்
ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது.
முக்கியமாக, கொல்கத்தாவில் ரயில், விமான, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டது.
இன்று மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் 1 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்https://thamilarnews.com/weathernews-4/
எங்கு மழை?
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “ரீமல் புயலானது வடக்கு – வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். பின்னர், வடகிழக்கு நோக்கி நகர்ந்து முற்றிலுமாக வலுவிழக்கும்.
புயல் வலுவிழந்தாலும் அசாம் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், அசாமில் உள்ள 1 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அதோடு, இன்று தெற்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.