யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தனியார் பேருந்து சேவை

இந்நிலையில். யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Previous

இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

Read Next

32 ஆண்டுகள் கடும் சிறை.. அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் – சீமான் உருக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular