
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி அவரது வீட்டில் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர். அதே போல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.