தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம் – காணொளி

uno

uno

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 15.02.2024 அன்று ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது.

16.02.2024 இன்று 2 ஆம் நாளில்  நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் முன்பாக, கண்டனப் போராட்டத்துடன் ஆரம்பித்து, மக்கள் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணம் நடைபெற்று ,மாலை றொட்ராம் மாநகரில் நிறைவடைந்தது.

ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அரசியல் மையங்களின் கவனயீர்ப்பு போராட்டங்கள் ,அரசியல் சந்திப்புக்களோடு ,ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை நோக்கி அறவழிப்போராட்டம் நகரவுள்ளது.

தனிச்சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல், தமிழர்கள் மீதான  திட்டமிட்ட வன்முறை, படுகொலைகள், தமிழர் பாரம்பரிய நிலங்களில்  திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் தமிழர்களுக்கெதிரான சட்டங்கள் என தாங்கொணா இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.

தமிழர்கள் இப்படியான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களூடாக,வெகுவிரைவாக  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில்,  எமது  தமிழீழ மண்ணை மீட்டு  சுதந்திரமாக வாழ  காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.

சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற  கருத்தை நடைமுறைப்படுத்த கோரியும் தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்பதை வலியுத்தியும் உரிமைக்குரல் எழுப்பி நீதிக்கான போராட்டமானது 04.03.2024 அன்று ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது.

எம் தமிழ் உறவுகளே!

தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில்   தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான  நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.

Read Previous

2024 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்கான மக்கள் திரள்நிதித் திட்டம்!

Read Next

பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular