
சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் 100 ஆவது படமாக அமைகிறது.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது. சூர்யா தற்போது கங்குவா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.