நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

srilanka

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா? என்று சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது .
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்கு வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையின் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) கரிசனை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தமிழர்களிற்கு எதிராக பாதுகாப்புபடையினரின் நடவடிக்கை கள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அர சாங்கமும் சிங்கள,பௌத்த பேரினவாத கொள்கைக ளைப் பேணுவது குறித்த அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடனத் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கை யில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண் டிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் இலங்கை அரசாங்கம் மேற்படி தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதை சர்வதேச கண்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Read Previous

3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

Read Next

போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular