இலங்கையில் தென்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் – 99 வருட குத்தகைக்கு காணி கொள்வனவு

இலங்கையின் தென்பகுதியில் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து தற்போது இஸ்ரேலிய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் சட்டவிரோத வர்த்தகத்தில்  ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் மத்தியில் இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

டெய்லிமிரர் இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து டெய்லிமிரர் தெரிவித்துள்ளதாவது.

தென்பகுதி கடற்கரையோரம் முழுவதும் சென்று இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை பார்வையிட்டோம் அவர்கள் உணவுவிடுதிகள் ஹோட்டல்கள் சிறிய கடைகள் போன்றவற்றை நடத்துகின்றனர்.

இலங்கையில் சுற்றுப்பயணங்களை ஏற்படும் அளவிற்கு உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர் என தெரிவிக்கும் உள்ளுர் மக்கள் அவர்களிற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் உள்ளுர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் மோதும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள உள்ளுர் மக்கள் சுற்றுலாப்பயணிகள் உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வர்த்தகநடவடிக்கைகளை பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் இந்த நிலைமையேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தென்பகுதி கடற்கரையோரங்களிற்கு சென்றவேளை இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளிற்காக நிலங்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 99 வருட குத்தகைக்கு நிலங்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நிலங்கi கொள்வனவு செய்வதால் நிலங்களிற்கான பெறுமதி விலை அதிகரித்துள்ளது.

உலகநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றுமில்லாதாவாறு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ள உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் நாட்டின் சில பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள் நீண்டகாலம் நாட்டில் தங்கியிருப்பதால் உருவாகும் பாதிப்புகள் குறித்து உரிய அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறையினர் இவர்கள் உரிய பதிவுகள் இன்றி வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Read Previous

யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

Read Next

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular