தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்

கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இம்மாநாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறிப்பித்தது.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 15.02.2024 முதல் எதிர்வரும் 27.02.2024 ஆம் திகதி வரை குறித்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் அதிபர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது கடந்த 21.01.2024மற்றும் 27.01.2024ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டங்ளும், குறித்த இரண்டு கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளும் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றம்

அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச்சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்தது.

மேலும், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்தது.

மேலும், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் பீற்றர் இளஞ்செழியனால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

தன்படி தமிழரசுகக் கட்சிக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ளவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார் கிளிநொச்சியில் கடந்த 23.02.2024 அன்று இடம்பெற்ற கட்சியின் கலந்துரையாடளில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஒற்றுமையாக எதிர்கொண்டு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையிலான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, கட்சியின் சிரேஷ்ட வழக்கறிஞ்சர்களுடன் கலந்துரையாடி இந்த வழக்கு தொடர்பில் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள மற்றும் நீதிமன்றினை அணுகுதல் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம் என்றார்.

Read Previous

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

Read Next

பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular