ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணிகளை தொடங்கியது ACTC நிறுவனம்!

A.R.Rahman's concert was messed up - ACTC started refund work!

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்.10 நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ACTC ஈவண்ட் நிறுவனம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் பணியைத் தொடங்கியது.இது குறித்து அந்நிறுவனமே x தளத்தில் பதிவிட்டுள்ளது.

Read Previous

வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட்!

Read Next

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது iPhone 15 சீரிஸ் போன்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular