
இன்று வாட்ஸ்அப் அப்ளிகேஷன் என்பது மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். உங்களிடம் இரண்டு ஆண்ட்ராய்டு போன்கள், இரண்டு ஐபோன்கள் அல்லது ஒரு ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஒரு ஐபோன் இருக்கும் பட்சத்தில், அந்த இரண்டு சாதனங்களிலும் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். நீங்கள் எளிதாக செய்வதற்கு வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது. ஒரே அக்கவுண்ட்டை இரண்டு வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான படிப்படியான வழிமுறையை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதுமானது.
இப்போது இது ‘லிங்க் ஆஸ் எ கம்பேனியன் டிவைஸ்’ (‘Link as a Companion Device’) என்ற அம்சத்தின் மூலமாக சாத்தியமாக்கப்பட்டுள்ளது.