இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசியதாக கூறப்படும் கடத்தல் தங்க கட்டிகளை தேடும் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது தமிழக, ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் அடுத்துள்ள வேதாளை சிங்கி வலை குச்சி கடற்றொழில் கிராம கடல் பகுதியில் இன்று (26.02.2024) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தேடும் பணிகள்
தமிழ் நாட்டின் வேதாளை சிங்கிவலை குச்சி மீன் பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையில் இருந்து ஒரு தொகை தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டுள்ளன.
இதன்போது, பாதுகாப்புத் தரப்பினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டமையால், கடத்தல் காரர்களால் தங்கக் கட்டிகள் கடலில் வீசி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த போதும் இதுவரையில் தங்கம் கிடைக்கப் பெறவில்லை என தெரியவருகிறது.
இதையடுத்து வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று (26) கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.