ரூ.999க்கு ஜியோவின் 4G மொபைல் அறிமுகம்!

Jio's 4G mobile launch for Rs.999!

ஜியோவின் 4G மொபைல் அறிமுகம்.இதன் மூலம் நாட்டில் உள்ள 2ஜி நெட்வொர்க் பயனர்களை 4ஜி நெட்வொர்க் பயனர்களாக மாற்றும் பலே திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஜியோ. இணைய இணைப்புடன் இயங்கக் கூடிய மலிவு விலையிலான போன் என ஜியோ இதனை பிராண்ட் செய்கிறது.

மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தில் ஃப்யூச்சர் போன்களுக்கான மற்ற நெட்வொர்க் ஆப்பிரேட்டர்களுடன் ஒப்பிடும்போது இதன் கட்டணம் 30 சதவீதம் மலிவு என ஜியோ தெரிவித்துள்ளது. அதோடு இதில் 7 மடங்கு கூடுதலாக டேட்டா பயன்பாட்டை பயனர்கள் பெறலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த போனின் அடிப்படை ரீசார்ஜ் கட்டணம் ரூ.123. அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 14ஜிபி 4ஜி டேட்டாவை பயனர்கள் ஒரு மாத காலத்துக்கு இதில் பெறலாம்.

அதுவே மற்ற டெலிகாம் நிறுவனங்கள் ரூ.179 ரீசார்ஜ் கட்டணத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 2ஜிபி டேட்டாவை மட்டுமே தற்போது வழங்கி வருகின்றன. ஜியோ பாரத் போனின் பீட்டா ட்ரையல் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சுமார் 10 லட்சம் ஜியோ பாரத் போன்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜியோ. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதன் விற்பனை ஒரே நேரத்தில் தொடங்க உள்ளது.

Read Previous

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் !

Read Next

தனுஷ் எழுதி இயக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular