
ஆப்பிளின் உற்பத்தி பங்குதாரர்களில் ஒருவரான ஃபாக்ஸ்கான், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ்கானைத் தவிர, பெகாட்ரான் மற்றும் டாடா குழுமத்தால் ஐபோன் 15 விரைவில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது , இந்த விஷயத்தை ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ ஐபோன் 15,
அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு சந்தையில் வாங்கக் கிடைக்கும்,
இது செப்டம்பர் 12 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது