சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஆக.23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தென்துருவத்தில் லேண்டர் தரையிறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாலை 6.04க்கு மாற்றப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.