• September 19, 2024

மதுபான கடைகளில் நிர்ணயித்த 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யயப்படும்!

Liquor shops will be suspended if they charge Rs 10!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கபடும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பது குறித்து அதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபகழகத்தின் கீழ் மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கபடுவதாக எழுந்த தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிருவாகம் எடுத்துவருகிறது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நிர்ணயிக்கபட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணிஇடை நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டபட்டுள்ளது.

Read Previous

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெறுகிறது!

Read Next

“மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular