இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள 18 நாடுகள் சம்மதம்!

18 countries agree to trade in Indian rupees!

உலக வர்த்தகத்தில் டாலர் மீதான மோகத்தையும் அதை சார்ந்து இருக்கும் தன்மையையும் குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கோள்வதற்கும், அதன் செயல்முறையை பயன்படுத்துவதற்கும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் பகவத் காரத், பதிவுகளின்படி, சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கியான RBI- ரஷ்யா மற்றும் இலங்கை உட்பட 18 நாடுகளில் உள்ள 60 வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளதாக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டாலர் மயமாக்கங்களில் இருந்து விலக நினைக்கும் 18 நாடுகளில், முக்கியமாக ரஷ்யா உள்ளூர் நாணய வர்த்தகத்தை மேம்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். ரூபாய் பரிவர்த்தனை மூலம் ஏற்றுமதி-இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால் அதன் மூலம் இந்தியாவிற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read Previous

புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

Read Next

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான பாலி, தீவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதைத் தடை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular