ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தையின் கல்வி, உடல்நலன் காக்கவும் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்து இருப்பார்கள். அதெற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால், எவ்வளவு கொடுப்பது
ஆனால், சிலர் House Wife என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். உங்கள் மனைவி வேலைக்கு போறாங்களா என்று கேட்டால், இல்லை என்று சொல்லாமல், வீட்டில் சும்மாதான் இருக்காங்கன்னு சொல்வாங்க, வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியாது. வீட்டில் பெண்கள் பார்க்கும் வேலையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, மகளிருக்கான உரிமையை கொடுக்க வேண்டும், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்