• September 19, 2024

அதிக பார்வைகளை பெரும் விஜய்யின் ‘நா ரெடி’ பாடல்!

Vijay's song 'Na Redi' has the most views!

Snap From Naa Ready Song

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்தவரும் லியோ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில் யூடியூபில் அதிக பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள நா ரெடி பாடல் நேற்று வெளியானது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது யூடியூபில் அதிக பார்வைகளை பெற்று வருகிறது.

Read Previous

பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்…அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து .

Read Next

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular