• September 16, 2024

விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் .

Vijay should avoid acting in smoking scenes! - Anbumani Ramadoss.

நடிகர் விஜயின் அடுத்த படமான லியோவில் அடுத்தப்படல் வெளியீட்டு குறித்து படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது . அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது குறித்து பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் ” நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!

லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

Leo Poster

Read Previous

பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

Read Next

தொடர் கனமழையால் விமானசேவை பாதிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular