கஸ்டடி’ பட அப்டேட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு!

Venkat Prabhu shared ‘Custody’ movie update!

மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற மே 12 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது. இந்த நிலையில் கஸ்டடி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், நாங்கள் படமாக்கியிருப்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

Read Next

தாயார் மறைவு.. கதறி அழுத ஓபிஎஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular