• September 19, 2024

காய்கறிகளை தொடர்ந்து மளிகைப்பொருள் விலையும் உயர்வு!

Vegetables followed by the rise in grocery prices!

கடந்த இரு வாரமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130-வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் நேற்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மளிகை பொருள்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழக்கமான விற்பனை விலையிலிருந்து 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் ரூ.20 முதல் ரூ.40 வரை உயா்ந்துள்ளது. 26 கிலோ சாதா பொன்னி அரிசி மூட்டை, ரூ.1,050 ஆகவும், நடுத்தர பொன்னி அரிசி ரூ.1,250-இல் இருந்து ரூ.1500-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ரூ.119-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.150-க்கும், ரூ.112-க்கு விற்கப்பட்ட உளுத்தம்பருப்பு ரூ.124-க்கும், ரூ.61-க்கு விற்கப்பட்ட கடலைப்பருப்பு ரூ.66-க்கும், ரூ.91-க்கு விற்பனையான சிறுபருப்பு ரூ.102-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

வெளியானது கமலின் அடுத்தப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

Read Next

உயிரை காப்பற்றவே குழந்தையின் கை அகற்றம் – விசாரணை அறிக்கை தாக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular