• September 19, 2024

`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை சமூகநீதி யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ! -பா ரஞ்சித்திற்கு உதயநிதி பதில் .

Udayanidhi's answer to Pa Ranjit about maa mannan

மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்தப் படத்துக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் தொடர்பான தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் , அந்த விமர்சனத்திற்கு பதில் கூறும் விதமாக உதயநிதி அவருக்கு பதிலளித்துள்ளார், இதுகுறித்து அவரது பதிவில்”`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.

`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர்
வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்!

Read Next

பேர்ஸ்டோ ரன் அவுட் – அஷ்வின் ஆதரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular