மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் அவரது கடைசி படமான மாமன்னன் வருகின்ற ஜூன் மாதம் வெளியாவதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது . இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் . இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று இரவு நடைபெற உள்ள நிலையில், இப்படத்தில் உள்ள பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது . அதில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார் .அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்த வடிவேலு ,பாஹத் பாசில் ,கீர்த்தி சுரேஷ் ,ஆகியோரும் பங்கேற்கின்றன .