• September 16, 2024

“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

திருமங்கலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வட்டார வளமையத்தில் புதிய பரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியப் பெருமக்களுக்கு “சிகரம் தொட சிலேட்டை எடு”என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி வெகு விமரிசையாக வட்டார கல்வி அலுவலர் திரு சின்னவெள்ளைச்சசாமி, வட்டார மேற்பார்வையாளர் திரு சரவணன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர் திரு சிவராமன்,திரு பிரசாத் ஒருங்கிணைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டு “சிகரம் தொட சிலேட்டை எடு”என்ற தலைப்பில் அற்புதமாக பேசினார்கள். கல்வியின் அவசியம், கல்வி கற்றவர்களின் பெருமைகளை இலக்கிய மேற்கோள், மேதைகளின் வாழ்க்கை போன்றவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை கூறி பேசினார்கள்.இப்போட்டியில் நடுவர்களாக திரு.கணேசன் தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி விடத்த குளம் மற்றும் திருமதி.சிவபாலா தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி மீனாட்சி பட்டி மற்றும்திருமதி.கலைச்செல்வி தலைமை ஆசிரியர் சத்ரிய நாடா உயர்நிலைப்பள்ளி சாத்தங்குடி ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் முதல் பரிசு திருமதி சுசிதா ஆனந்தி (அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி கரடிக்கல்), இரண்டாம் பரிசு உஷா மகேஸ்வரி (பி கே எம் தொடக்கப்பள்ளி வடக்கு திருமங்கலம்) , மற்றும் மூன்றாவது பரிசு தாமரைச்செல்வி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைக்குடி) பெற்றனர். முதல்பரிசு Rs.1000,இரண்டாம் பரிசு Rs.750, மூன்றாம் பரிசு Rs.500 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தன்னார்வலர்களுக்குரிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 1000 விடத்த குளம் மையம் பிரேமலதா, இரண்டாவது பரிசு ரூபாய் Rs.750 கீழ ஊரப்பனூரை சேர்ந்த சிவன் ஜோதிக்கும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது, பரிசுகளை அரசு மருத்துவர் திருமதி ராமலட்சுமி வழங்கினார்

 

 

Read Previous

மக்கள் படத்தை அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. – சசிகுமார்!

Read Next

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular