• September 20, 2024

டெண்டர் முறைகேடு – உத்தரவு தள்ளிவைப்பு!

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கு. இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் . ஈபிஎஸ்-க்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது – லஞ்ச ஒழிப்புத் துறை. பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது – லஞ்ச ஒழிப்பு துறை. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்திய, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை – ஈபிஎஸ். ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை> லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஸ்டாம்ப் வைக்கும் வழக்கமான நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது – ஈபிஎஸ்

Read Previous

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்!

Read Next

வேட்டி, சேலை திட்டம் – நிதி ஒதுக்கீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular