• September 20, 2024

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

Tanjore

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர்.

இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒருசிலருக்கு முகம் சுழிக்க வைக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்து வரலாம் என்றும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையைப் பார்த்த பலரும் இதை வரவேற்றுள்ளனர்.

Read Previous

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்

Read Next

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular