• September 20, 2024

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா !

Siddaramaiah becomes the Chief Minister of Karnataka!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் பதவி தங்கள் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி  வந்தனர். அதேபோல் முதல்வர் பதவிகேட்டு சிவகுமாரும், சித்தராமையாவும் உறுதியாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது. முன்னதாக இதுகுறித்து முடிவெடுக்க கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தலைமையை சந்தித்து தனது விருப்பங்களை தெரிவித்தனர். தமக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும், ஏற்கனவே இதுதான் தன்னுடைய கடைசி தேர்தல் என அறிவித்ததால் தனக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அடுத்த கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு .  மற்றொரு போட்டியாளரான டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு. மே 20ம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு.

Read Previous

ஐபிஎல் போட்டி – பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்!

Read Next

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular