• September 16, 2024

தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் ஒரு இளம் நடிகை!

Sensational 19 year old actress joins Dhanush's milestone movie 'D50'

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் 50வது படமான ‘டி50’, ‘பா பாண்டி’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும் , இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே அமலா பால், எஸ்.ஜே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளார் .

‘ராயன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இளம் நடிகை அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 19 வயதான இவர் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்து புகழ் பெற்றார். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘PT’ படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது . இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வடசென்னை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Read Previous

சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை– மத்திய அரசு!

Read Next

சென்னை மெட்ரோ – சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular