Release of the song ‘Ninayaviruka..’ from the film Batu Thala
சிம்புவின் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல படத்திலிருந்து நினைவிருக்கா என்ற பாடல் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை ரகுமானின் மகன் அமின் – சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக இதே படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் குரலில் நம்ம சத்தம் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.