• September 16, 2024

குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மைக்கான நெறிமுறை!

Protocol for the Management of Malnutrition in Children!

இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விரிவானப் பராமரிப்பு வழங்குவதற்காக ஒரு தரப்படுத்தப்பட்ட தேசிய நெறிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பசியுணர்வுச் சோதனை மற்றும் “அரும்பும் தாய்” கருத்தாக்கம் (ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தையின் தாய்க்கு ஆரோக்கியமான குழந்தையின் தாய் வழி காட்டுதல்) போன்ற புதிய முன்னெடுப்புகளை உள்ளடக்கியது.
. இது அங்கன்வாடி அளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு மேலாண்மை செய்வதற்கான விரிவான 10 நிலை வழிகாட்டுதல்களை வழங்குகிறது,
இது பரிந்துரை, ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான முடிவெடுத்தல் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
அசாம் மாநிலத்தில் முதன்முதலாக அரும்பும் தாய்” கருத்தாக்கம் பயன்படுத்தப் பட்டது,
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் அங்கன்வாடி  மையத்தில் உள்ள ஆரோக்கியமான ஒரு குழந்தையின் தாய் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் தாயை வழி நடத்துகிறார்.

Read Previous

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

Read Next

ஆம்னி பஸ்கள் ஸ்டிரைக் வாபஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular