• September 16, 2024

சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

Prime Minister Modi named the place where the Chandrayaan-3 lander landed as 'Shiva Shakti'!

பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, சந்திரயான்-3 வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாராட்டினார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம், அந்த புள்ளி ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கட்டுப்பாட்டு வளாகத்தில் அறிவித்தார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி இனி ‘தேசிய விண்வெளி தினம்’ என்று அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், சந்திரயான்-2 கால் தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நினைவூட்டும். .என கூறினார்

Read Previous

காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.-மு.க.ஸ்டாலின் பேச்சு!

Read Next

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular