• September 16, 2024

’போர் தொழில்’ திரைப்படம்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'Por Thozhil ' Movie: OTT Release Date Announced!

புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி, அசோக் செல்வன், சரத் குமார் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இளம் இயக்குநர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. முதலில் கடந்த பிப்ரவரி மாதம் கணேஷ் பாபு என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி, கவின் நடித்த ’தாதா’ திரைப்படம் வெளியாகி எதிர்பாராத வெற்றி கண்டது. அடுத்ததாக மார்ச் மாதம் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் வெளியாகி விமர்சனரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Previous

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

Read Next

ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular