• September 16, 2024

இந்தியாவில் மட்டும் 100கோடி வசூல் மழையில் ”ஓப்பன்ஹெய்மர்”!

Oppenheimer box office collection

ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம்  ஜூலை 21-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் அண்மையில் வெளியான இப்படம் உலகம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ13.50 கோடி  வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்நிலையில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read Previous

‘லியோ’ படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Read Next

மணிப்பூர் வீடியோ விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular