• September 16, 2024

மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!

New Bharat Literacy Program in Madurai District!

செப்டம்பர் 1 2023, இன்று 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கார்மேகம் மற்றும் சரவணன் முருகன் ஆலோசனையின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஒன்றியங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்கள் 38 தொடங்கப்பட்டது . இம்மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 791 கற்போருக்கு எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி வழங்கப்பட உள்ளன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சின்ன வெள்ளைச்சாமி தலைமையில் கற்றல் மையம் திறக்கப்படுகிறது. மேலும் வட்டார கல்வி அலுவலர் விஜயராஜ் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பி கே என் தெற்கு துவக்கப்பள்ளியில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் வட்டார வளமைய மேற்பார்ளர் மேற்பார்வையாளர் பொறுப்பு சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பெற்றனர் சிவராமன் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் அனைத்து மையங்களிலும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லம் தேடி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Read Previous

ரஜினிக்கு பரிசாக BMW X7 காரை வழங்கிய கலாநிதி மாறன்!

Read Next

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular