‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன. அந்த வகையில் மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுவரை நாம் பார்த்திடாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் 4 மில்லியன் பார்வைகளை கடந்த ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
TRAILER LINK -> https://youtu.be/xWe03YByWEI