• September 19, 2024

விஜய் பிறந்தநாளில் வெளியான லியோ ஃபர்ஸ்ட் லுக்!

Leo first look released on Vijay's birthday!

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் ஒன்று பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டது. 2,000 நடன கலைஞர்கள் பங்கேற்க இந்தப் பாடலுக்கு தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றினார்.இந்தப் பாடலில் விஜய்யுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன் நடனமாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்திலிருந்து நா ரெடி பாடலின் புரமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முழு பாடலும் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகிறது. இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் பலரும் போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leo first look released on Vijay's birthday!
Leo First look

Read Previous

வெளியானது லியோ திரைப்படத்தின் “நா ரெடி” பாடலின் ப்ரோமோ

Read Next

செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular