• September 20, 2024

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

From Amparai to Mullivaikal Urthi Bhavani demanded justice for the massacre of Tamils!

இனப்படுகொலையின் 14 ஆவது நினைவேந்தலையிட்டு, தமிழின படுகொலைக்கு நீதி கோரி தமிழ் தேசிய | மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்திரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டது.

அம்பாறை, வீரமுனை கோவிலில் 1990ஆம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில் சுடர் ஏற்றி, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, ஊர்தி பவனியை ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பித்தனர்.

இந்த ஊர்தி பவனி அங்கிருந்து கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்ப்பட்ட நினைவு தூபியை சென்று, அங்கு சுடர் ஏற்றி, அதனை தொடர்ந்து சத்திருக்கொண்டான் படுகொலை செய்யப்பட் நினைவு தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தி, செங்லடி, வாழைச்சேனை ஊடாக வாகரையை சென்று, அங்கிருந்து இன்று திருகோணமலையை சென்றடையவுள்ளது.

இந்த ஊர்தி பவனி திங்கட்கிழமை, திருகோணமலையில் இடம்பெற்ற தமிழின படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவு தூபிகளை சென்று அஞ்சலி செலுத்தி 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளது.

Read Previous

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

Read Next

இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular