• September 16, 2024

2.8 கோடி பார்வைகளை கடந்த “கேப்டன் மில்லர்” டீசர்!

"Captain Miller" Teaser Crosses 2.8 Crore Views!

நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள “கேப்டன் மில்லர்” படத்தில் டீசர் 2.8 கோடி பார்வையாளர்களை கடந்த ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை தக்க வைத்துள்ளது.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.அந்த வகையில்,  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில்  வெளியானது.  டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. மேலும் யூடியூபில் இந்த டீசர் 2.8 கோடி பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தில் உள்ளது

Read Previous

2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர்!

Read Next

பேஸ்புக்கில் தனது Cover போட்டோவை மாற்றிய நடிகர் ஃபகத் பாசில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular