• September 20, 2024

இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

Australia donated a beach craft plane to Sri Lanka!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந் நாட்டு அரச விமானப்படைக்குச் சொந் தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் A32673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் வழங்குவது தொடர் பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதத்தை இலங்கைக்கான அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத் தியோகபூர்வமாக கையளித்தார்.

பீச் கிராப்ட் என்பது நவீன இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஆகும். இந்த அன்பளிப்பு இலங்கையின் கடல்சார் பாது காப்பை வலுப்படுத்தும் திறனை மேம்ப டுத்தும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றச்செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடை யிலான நெருக்கமான ஒத்துழைப்பை இது உறுதிப்படுத்துவதுடன், கடல் மார்க்கமாக இடம்பெறும் மனிதக் கடத்தலை எதிர்க்கும் செயல்முறைக்கு பரந்த வழங்க முடியும். பங்களிப்பை

கடல்சார் குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஆதரவை அவுஸ்தி ரேலிய அரசாங்கம் மிகவும் பாராட்டுவ தாகவும், ஆட்கடத்தல் செயற்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்துவ தற்கும், கடல் கொள்ளை மற்றும் பாதுகாப் பற்ற கடற் பிரயாணங்களிலிருந்து மக்களை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒத் துழைப்பு வேலைத்திட்டம் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி விமான செயற்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 மாத காலம் இலங்கைக்கு உதவிகளை வழங்கவுள்ளதோடு, அதன் பின்னர் அதன் பொறுப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும். அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர், முதன்மைச் செயலாளர் பிரெட் செஹண்டர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கேன் உள்ளிட்டவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்

Read Previous

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

Read Next

ரணிலிடமா மகிந்தவிடமா அதிகாரங்கள் யார் வசம்? – கேள்வி எழுப்புகிறார் செல்வம் எம். பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular