Actor Ajith’s father passed away..!
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.