ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்து , ரஜினிக்கு பரிசாக BMW X7 காரை பரிசாக வழங்கினார் .கலாநிதி மாறன் வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்.