இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான ‘லியோ’ அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , மேலும் அர்ஜுன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர், இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்திற்கான முதல் கிலிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளனர்.ஹரால்டுதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜூனின் கிலிம்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.